இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை இறக்குமதியாளர்கள் இதன் போது பதிவு செய்து கொள்ள முடியும்.

இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள் www.trade.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை 0762 566 047 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.