Header image alt text

தேனி சஞ்சிகை மற்றும் தேனி இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரன் (ஜெமினி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) ஜெர்மன் கிளையின் சுமார் 60,000 ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது. Read more

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, முல்லைத்தீவு பொலிஸார், இன்று (20) தெரிவித்தனர். Read more

சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தொலைபேசி நிறுவனங்கள் இது தொடர்பில் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். Read more

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். Read more

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட  பொருளாதார மத்தியநிலையம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. Read more