முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, முல்லைத்தீவு பொலிஸார், இன்று (20) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் போட்டிபோட்டு ஓடியமையே இந்த விபத்துக்கு காரணம் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.