இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.