Header image alt text

தோழர் ஸ்கந்தா அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் கந்தர் இளையதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கிளாலியில் உள்ள முன்பள்ளிக்கு தோழர் சின்னவன் அவர்களின் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. Read more

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் வரட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 சதவீதத்தை விடக் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன. Read more

ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று (27) பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவு எரிவாயு கையிருப்பு இருப்பதால், நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு  தரையிறங்கியது. தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வர​வேற்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு புதியத் தலைவரை தெரிவு செய்வதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார். Read more