இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு  தரையிறங்கியது. தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வர​வேற்றன.