இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு புதியத் தலைவரை தெரிவு செய்வதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய தலைவருக்கான போட்டி கடுமையாக நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.