இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்றுபகல் 1 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் மெய்நிகர் வழியாக திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ,

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட், மாநகரசபை உறுப்பினர் தர்சானந் மற்றும் அரசாங்க அதிகாரிகள், கல்விச் சமூகத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.