Header image alt text

BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கை வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸை சந்தித்த போது இந்தியா – இலங்கைக்கு இடையில் மேலும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை (30) முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது. Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வீடொன்றை வழங்க அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு – 07, மலலசேகர மாவத்தையில் மைத்திரிக்கு வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்று (29) நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை கைவிடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அதன் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். Read more

பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more