மிரிஹானையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஊடகவியலாளர்கள் நால்வரும் அடங்குவர். இது தொடர்பிலான தகவலை சட்டத்தரணி நுவான் போபகே வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்கள் சித்திரவதை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்த சட்டத்தரணி, அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார்.