மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு தரப்பினர், தண்ணீர் பீச்சிய​டித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட முயற்சி செய்தனர். அதன்பின்னர், குண்டாந்தடி பிர​​யோகம் மேற்கொண்டனர். இறப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பஸ்ஸொன்று தீக்கிறையாக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் ​மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.