மிரிஹானயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 26 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
களுபோவில வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களே அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் (01) ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் கங்கொடவில நீதவானினால் 100,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேர், ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.