அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
காபந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சு.கவின் இக்கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.