Header image alt text

அமரர் தோழர் மு.கனகராஜா அவர்களின் துணைவியாருக்கு வைத்திய செலவிற்காக கழகத்தினுடைய ஜெர்மன் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்ட 20,000/= ரூபா நிதியை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி, மத்திய குழு உறுப்பினர் தோழர் ராகவன் ஆகியோர் இன்று வழங்கிவைத்தனர்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான  கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 8ஆம் திகதி மன்றில் ஆஜராகுவதற்காக நோட்டீஸ் அனுப்புமாறு, உயர்நீதிமன்றம், இன்று (04) உத்தரவிட்டது. Read more

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, இன்று (04) தெரிவித்தார். Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more