பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் இந்த எரியும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.