Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 6 April 2022
Posted in செய்திகள் 

வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் செல்வரட்ணம் லவன் (தோழர் லவன்) அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (05.04.2022) செவ்வாய்க்கிழமை மரணித்தார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக பிரபல பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். Read more

அரசாங்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (08) இரண்டு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது. Read more

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டவைத்திய அதிகாரிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர்கள் இருவரும் சமூகமளிக்காமையால், அவர்களுக்கு அழைப்பாணையை பிறப்பிக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளால்தான் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்திய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பாக இன்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை, Read more