ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று (09) நள்ளிரவு முதல் போராட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தங்கியுள்ளனர்.

காலிமுகத்திடலுக்கு அருகாமையில் நேற்றுக் காலை ஆரம்பமான பொதுப் போராட்டத்திற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்கள் குவிந்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சமூகத்தினர் நேற்று பிற்பகல் வீதியில் தமது சமய வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நள்ளிரவு வரை அங்கேயே இருந்த கூட்டம் இன்று காலை வரை இரவு முழுவதும் விழித்திருந்தது.

மேலும் வீதியில் குவிந்திருந்த குப்பைகளை போராட்டக்காரர்கள் தாமாக முன்வந்து அகற்றியமை குறிப்பிடத்தக்கது.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.