தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம்) அவர்களின் பூதவுடல் அவரது வவுனியா தெற்கிலுப்பைக்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது வவுனியா மாவட்ட கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தோழர் கடாபிக்கு கழக கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும், இன்றுபிற்பகல் 12.45 மணியளவில் தோழரின் உடல் நல்லடக்கத்திற்காக கோயில்குளம் இந்து மயானத்திற்கு ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 1.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.