வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான “உமாமகேஸ்வரன் வீதி” வீதிக்கான மாதிரி வரைபடம் புளொட் சுவிஸ் தோழரான லெனின் எனும் திரு. திருமதி செல்வபாலன் மனோகரி (சசி) தம்பதிகளின் இருபத்தைந்தாவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் பிள்ளைகளான ஈழதர்சன் யாழிசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் நிறுவப்பட்டது.

வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் இன்றையதினம் 12/04/2022 காலை 11 மணியளவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரவி, தோழர் சிவா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.