முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை தீர்ப்பது, இளைஞர் இயக்கத்தை வலுப்படுத்துவது ஆகியன குறித்து முதற்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்துமபண்டார, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம். சுமந்திரன், அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.