இம்மாதம் 20ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நாளாக அறிவித்து வேலைத்தலங்களில் தொடர் வேலைநிறுத்தத்துக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன வர்த்தக கூட்டமைப்புடன் இணைந்து செயல்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கு நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்க தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்பும் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.