மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை விரட்ட மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமைய இராணுவத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும், மக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்க வேண்டாம் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்தளபதியிடமும், பாதுகாப்பு செயலாளரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

வன்முறைகள் ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காகவும், அனைத்து இலங்கையர்களிடையே சமாதானம் மற்றும் சகவாழ்வுக்காகவும் காவல்துறை உதவி கோரும் போது மட்டுமே பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இந்த இராணுவ உதவி வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது