இலங்கையில் அவசர அடிப்படை மருந்துப் பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இலங்கையின் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சினால் இந்த உதவிகளை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக திரட்டப்பட்ட நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் எழுந்துள்ள அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை இல்லாமல் செய்வதற்காக இந்த உதவித் தொகையை பெற்றுக் கொடுக்க சிங்கப்பூர் முன்வந்துள்ளது.