எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, ஜூலை மாதம் முன்னெடுக்கப்படும் வருடாந்த  பஸ் கட்டண திருத்ததில் குறைந்த பஸ் கட்டணமாக 40 ரூபாயை அறவிட நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக சகல பஸ் கட்டணங்களையும் 50 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பஸ் கட்டண திருத்தத்தை தற்போதைய நிலையில் முன்னெடுக்க தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அவர், எரிபொருள் விடயத்தில் உரிய முறைமை ஒன்று செயற்படுத்தப்படாவிட்டால், ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் முன்னெடுக்கப்படும் என்றார்.