மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இன்று (22) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை இராஜாங்க அமைச்சராக கடந்த 19ம் திகதி இவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.