மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான முல்லைத்தீவு மக்களின் போராட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது. இப்போராட்டம் முள்ளியவளை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமாகி மாஞ்சோலை வரை சென்று அங்கு சிறு கருத்தரங்குடன் நிறைவடைந்தது.

இப்போராட்டத்தில் எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், மத்தியகுழு உறுப்பினர் வசந்தராசா, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் து.விக்னேஸ்வரன், கட்சியின் மாவட்ட செயலாளர் யூட்சன், மற்றும் கட்சியினுடைய சகல பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.