நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான பிரேரணை நாளை (25) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சார்பில் இது தொடர்பான பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.