இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவரும் 11 கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் என ஐவர் கொண்ட குழுவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்துக்கு ஏனையக் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள இந்த ஐவர் கொண்ட குழு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக இந்த ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஜனாதிபதி இணங்கினால் அமைக்கப்பட உள்ள இடைக்கால அரசாங்கத்துக்கு ”தேசிய ஒருமித்த அரசாங்கம்” என பெயரிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.