தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய மேதின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான பேரணி நடைபெற்றது.

இதன்போது பல்வேறு பதாகைகள் கொண்ட வாகனங்களும் பேரணியில் கலந்துகொண்டன.

இதன்போது மட்டக்களப்பு அரசடியிலிருந்து ஆரம்பித்த பேரணியானது கல்லடிப்பாலம் ஊடாக மீனிசை பூங்கா வரையில் சென்றதுடன், அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உபதலைவர்களுள் ஒருவரான கேசவன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சூட்டி, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராகவன், கிருபாமாஸ்டர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், பிரதேச சபையின் தவிசாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.