கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நாளை (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர் யூனியன், ரயில்வே ஊழியர் சங்கம், ரயில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஊழியர்களும் பணியை விட்டு வெளியேறி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க உள்ளனர்.

எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அரசாங்கம் பதிலளிக்காவிட்டால், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது