பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் தியத்த உயனவில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த பாராளுமன்ற அமர்வு வரையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் ​தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 17ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படவிளக்கம்: போராட்டக்காரர்கள் உணவு விநியோகம் செய்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பு கூடாரத்தின் மீதும். பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது)