புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது.

அதில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தோருக்கு வாய்ப்பில்லை என்றும், சிறுப்பான்மை கட்சிகளுடன் பேரம்​பேசி இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.