புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்கு இன்று (13) காலை சென்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மலர் கொத்துடன் சென்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, பிரதமர் ரணிலை இன்று (13) காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிற்பகல் ​வேளையில் அலரிமாளிகைக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிரதமர் ரணிலை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர், இலங்கைக்கான  ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி பிரதமர் ரணிலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் ரணிலுடன் சந்தித்துப் ​​பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.