பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கே ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.