Header image alt text

யுத்தத்திலே தமது உயிரைப் பலிகொடுத்த தமிழ் மக்களுடைய நினைவேந்தல் நேற்று முள்ளிவாய்க்காலிலே மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. அங்கு மாத்திரமல்ல வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களுடைய நினைவாக விசேடமாக இம்முறை காலிமுகத்திடலிலே நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பமாக, ஒரு நல்ல அறிகுறியாக, அதாவது, அந்த இளைஞர்கள் எவ்வளவு தூரம் மனமாற்றமடைந்து தங்களுடைய அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பாரக்கின்றேன். Read more

19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…… Read more

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அரச, அரசால் அங்கிகரிப்பட்ட தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாவது தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், கொழும்பில் இன்று (19) நடத்தப்பட்ட போராட்டப் பேரணி, மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. Read more

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார். Read more

போரில் உயிரிழந்தவர்களையும்  உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைக்கோரும் குடும்பங்களையும் நினைவுகூருகின்றோம். நல்லிணக்கத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உறுதிசெய்ய கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மிக அவசியம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார், Read more

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இழந்தவர்களை நினைவுகூரும் போது இது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாக இருக்கவேண்டும். Read more