போரில் உயிரிழந்தவர்களையும் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைக்கோரும் குடும்பங்களையும் நினைவுகூருகின்றோம். நல்லிணக்கத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உறுதிசெய்ய கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மிக அவசியம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்,
அதேபோல் பல தசாப்தங்களாக நடந்த மோதலில் இலங்கையின் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு 13 வருடங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிசாய்ப்பதும், அவர்களின் வலிகளை புரிந்துகொள்வதும் அவர்களுக்கு என்ன நடந்தது, எதற்காக நடந்தது என்பதை புரிந்துகொள்வது முக்கியமானதாகும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் குறிப்பிட்டுள்ளார்.