நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடப்படும் என்றும் இந்த திருத்தம் இறுதி அனுமதிக்காக அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.