இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பஸ் கட்டணங்களையும் 19.5% ஆல்  அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆகக் கூடிய கட்டணம் 3370 ரூபாயிலிருந்து 4025 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.