மாத்தளையைப் பிறப்பிடமாகவும், 07ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் சுரேஸ் அவர்களின் அன்புத் தாயாருமாகிய மூக்கன் லட்சுமி அவர்கள் நேற்று காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
24.05.2022.