பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகம- அட்டுளுகமயைச் சேர்ந்த பாத்திமா ஆய்ஷாவின் மரணம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இவ்வாறான குற்றங்களை தடுக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சிறுமியை தேடும் நடவடிக்கைகள், பொலிஸ் மோப்பநாய்க் கொண்டு முன்னெடுக்கப்பட்டன.
அச்சிறுமியின் சடலம், சேற்றுக்குள் இருந்தே, நேற்று (28) மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.