Header image alt text

31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..

வவுனியா – கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்ற 16 வயதான ராசேந்திரன் யதுர்சி நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற பகுதிநேர வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றார். வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற சிறுமி, மாலை 5.30 வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் வெள்ளம் காரணமாக தமக்கு உரிய பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று பரீட்சையில் தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை பிறப்ரபித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார். சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். Read more

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார். ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகியதை தொடர்ந்து புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் இன்று(31) பதவியேற்றார். Read more

அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன், முரண்டுபிடித்தாள் அதனால், சகதியில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார். Read more