Header image alt text

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 48ஆம் வருட நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 10.00 மணியளவில் நடைபெற்றது. Read more

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். Read more

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்தார். Read more

நாட்டின் தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் இதை தெரிவித்தார். Read more