ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நேற்றைய தினம் ராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடமான தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.