Header image alt text

எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார். Read more

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். Read more

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்து அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more