இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்டத்திற்குட்பட்ட பெரிய செல்வகந்தை, தம்பலகல தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் இன்று(13) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

மாத்தளை – எல்கடுவ பெரிய செல்வகந்தையில் 41 வீடுகளும் தம்பலகல பகுதியில் 59 வீடுகளும் மக்கள் பாவனைக்காக இன்று(13) கையளிக்கப்பட்டன.

95 மில்லியன் ரூபா இந்திய நிதி ஒதுக்கீட்டிலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளுடன் இந்த 100 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

எல்கடுவ பெருந்தோட்ட தலைவர் சுமித் ஜயரத்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டமையின் நினைவாக இதன்போது மரக்கன்றுகளும் நடப்பட்டன.