இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் உறுதியளித்துள்ளார்.