இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பதை சந்தோஷமளிக்கிறது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.