ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான பொன்.செல்லத்துரை அவர்களின் தலைமையில் இன்றுகாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் நா.இரட்ணலிங்கம், பொருளாளர் க.சிவநேசன், உபதலைவர் ராகவன், நிர்வாக பொறுப்பாளர் ம.பத்மநாதன், கட்சியினுடைய யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள், சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் செயற்பாடுகள் குறித்தும், கட்சியின் மட்டக்களப்பு. மாவட்ட அரசியல் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடினார்கள்.

இக்கூட்டத்தில் கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட மத்தியகுழு உறுப்பினர்களான என்.ராகவன், கிருபைராஜா, கட்சியின் பிரதேச சபைகளின் உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.