அமரர் ம.சிவநேசன் 1ஆம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் 18.06.2022 சனிக்கிழமை நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன் (தோழர் சங்கரி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான க.சிவநேசன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியினுடைய யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், காரைதீவு விவேகானந்த விளையாட்டுக்கழக தலைவர் லயன் ச.நேசராசா, காரைதீவு விவேகானந்த தேசிய பாடசாலையின் அதிபர் ம.சுந்தரராஜன், சமூக சேவையாளர் நந்தகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் த.சகாதேவராஜா, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் (திருக்கோவில்) வா.குணாளன் ஆகியோரும்,

அழைப்பு விருந்தினர்களாக கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம், உபதலைவர்கள் வே.நல்லநாதர், பொன்.செல்லத்துரை, நிர்வாக பொறுப்பாளர் ம.பத்மநாதன், வவுனியா வெண்கல செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் த.யோகராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் வே. குகதாசன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.நிஸ்கானந்தராஜா(மட்டக்களப்பு), க.மகேந்திரன்(கிளிநொச்சி), து.விக்னேஸ்வரன்(முல்லைத்தீவு), மத்தியகுழு உறுப்பினர் ந.ராகவன், கிருபா மாஸ்டர் மற்றும் கெங்கா, ஜபார், சிவா, பிறேம் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

வரவேற்புரை தலைமையுரை இடம்பெற்றதோடு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தெரிவான வீரமுனை கிருஷ்ணா விளையாட்டுக் கழகம், காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போட்டியில் வீரமுனை கிருஷ்ணா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று ம.சிவநேசன் 1ஆம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இவ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டது.

காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டதோடு, ஆட்ட நாயகன், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும், மரணித்த கழகத் தோழர்களின் குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட 13 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் மாவட்ட மட்ட மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த 13 பேர் கௌரவிக்கப்பட்டு கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த சமூக சேவையாளரான அமரர் செ.மணிச்சந்திரன் அவர்களைக் கௌரவிக்கும் முகமாக அவரது புதல்வர் கௌரவிக்கப்பட்டு கேடயமும் வழங்கப்பட்டது. அத்துடன் இருமுறை ஜனாதிபதி விருதுபெற்ற ஊடகவியலாளர் சகாதேவராஜா அவர்கள் கௌரவிக்கப்பட்டு கேடயமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன் (தோழர் சங்கரி) அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.