தமிழ் ரைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் திரு இராசநாயகம் அவர்களின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.

அவர் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மிக ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் பத்திரிகையில் பிரசரித்து வந்திருக்கின்றார்.

அவரது ‘தமிழ் ரைம்ஸ்’ பத்திரிகையானது தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல தமிழர்களின் பிரச்சினையில் அக்கறைகொண்ட மற்றைய சமூகங்களாலும் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு பத்திரிகையாகும்.

அவருடைய ஆங்கிலப் புலமையும் தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவர் கொண்டிருந்த ஆழமான, தெளிவான பார்வையும் எனக்கு அவருடனான ஈடுபாட்டை ஏற்படுத்தியது. நான் லண்டனில் வாழ்ந்த காலங்களில் அவருடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தேன். அதன்பிறகு நான் லண்டன் செல்கின்றபோதெல்லாம் அவரைச் சந்திப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தேன்.

அவருடைய இழப்பு தமிழ் இனத்திற்கு ஒரு பாரிய இழப்பாகவே நான் பார்க்கின்றேன்.

அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு எனது இதயபூர்வ அஞ்சலியை செலுத்துகின்றேன்.

த.சித்தார்த்தன்(பா.உ)
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
20.06.2022.